உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பழநியில் குவிந்த பக்தர்கள்

 பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்த நிலையில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பழநி முருகன் கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர். கோயிலுக்கு செல்ல பக்தர்கள் ரோப் காரில் பல மணி நேரம் காத்திருந்தனர். கோயிலில் பொது , கட்டண தரிசன வரிசையில் 3 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் காத்திருந்து தரிசித்தனர். கூட்டம் அதகளவில் இருந்ததால் குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கிரிவலப் பாதையில் மீனாட்சியம்மன் கோயில் அருகே பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. கிரிவீதியில் பேட்டரி காரில் பக்தர்கள் முண்டியடித்து ஏறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை