உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள் சப்த கன்னியரான சிறுமியருக்கு வழிபாடு

பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள் சப்த கன்னியரான சிறுமியருக்கு வழிபாடு

ரெட்டியார்சத்திரம்: பலக்கனுாத்து கிராமத்தில் பாரம்பரிய வழக்கப்படி 7 சிறுமிகளை சப்த கன்னியராக பாவித்து ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.ரெட்டியார்சத்திரம் அருகே பலக்கனுாத்து கிராமத்தில் கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு சப்த கன்னியர் வழிபாடு நடப்பது வழக்கம். இந்தாண்டிற்கான விழாவில் சப்த கன்னியர்களாக 7 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர். மஞ்சள் உடை, மஞ்சள் காப்பு கட்டிய நிலையில் விழா துவங்கியது. சிறுமியர் மாரியம்மன் கோயிலில் தங்க வைக்கப்பட்டனர்.தினமும் காலை, மாலை நேரங்களில சப்த கன்னியர்களுக்கான சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் சப்த கன்னியரை கிராம எல்லையில் இருந்து நெய் விளக்கு ஏந்தி மேளதாளம் முழங்க ஊர்வலமாக மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து வந்தனர்.பூக்குழி இறங்குவதற்கான ஆழி வளர்க்கப்பட்டு 7 சிறுமியருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது பின்னர் ஐயப்ப பக்தர்கள் குருசாமிகள் வீரப்பன், ஆறுமுகம் தலைமையில் பூக்குழி இறங்கினர். அன்னதானமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ