மேலும் செய்திகள்
பழநி கோயிலில் போலி கைடுகளால் பக்தர்கள் அவதி
10-Mar-2025
பழநி; பழநி கிரிவீதியில் வெயிலின் தாக்கத்தால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.பழநி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து வருகின்றனர். அவர்கள் காவடி எடுத்து கிரிவலம் சுற்றி வருகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் பாத விநாயகர் கோவிலில் இருந்து குடமுழுக்கு மண்டபம் வரை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.கிரி வீதியில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் கிரிவலம் வரும் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். கோயில் சார்பில் கிரி வீதியில் முக்கிய இடங்களில் வெயிலின் தாக்கத்தை குறைக்க தரை விரிப்பு அமைத்து அடிக்கடி தண்ணீர் தெளிக்க வேண்டும் . இதுபோல் பேட்டரி கார் நிற்கும் இடங்களிலும் தரை விரிப்பு விரிப்பு ஏற்படுத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10-Mar-2025