உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பழநியில் பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

 பழநியில் பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

பழநி: ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். ஐந்து மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பழநி முருகன் கோயிலுக்கு வெளிமாநில, வெளியூர் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகம் உள்ளது. அவர்கள் ரோப்கார், வின்சில் கோயிலுக்கு செல்ல பல மணி நேரம் காத்திருக்கின்றனர். கோயிலில் பொது தரிசனம், கட்டண தரிசன வரிசையில் வெளிப்பிரகாரத்தை சுற்றியும் அவர்கள் காத்திருக்கின்றனர். நேற்று பக்தர்கள் ஐந்து மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். நெரிசலை கட்டுப்படுத்த யானை பாதையை அடைந்து குடமுழுக்கு மண்டபம் வழியாக மலைக்கோயில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பழநி கிரி வீதியில் அலகு குத்தி, காவடி எடுத்து, முடி காணிக்கை செலுத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்தனர். திருஆவினன்குடி, அருள்ஜோதி வீதி, இடும்பன் இட்டேரி ரோடு பகுதிகளில் பாதைகளில் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிர மமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !