உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழனி கோவிலில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்

பழனி கோவிலில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்

பழனி : திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில் விடுமுறை, அய்யப்ப பக்தர்கள் சீசன், சஷ்டியை முன்னிட்டு ஏராளமாக குவிந்த பக்தர்கள், ரோப்கார், வின்சில் செல்ல பல மணி நேரம் காத்திருந்தனர். பொது, கட்டண வரிசையில் வெளிப்பிரகாரத்தை சுற்றி பக்தர்கள், 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். வெளிப்பிரகாரத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பக்தர்கள் அவதிக்குள்ளாயினர். நெரிசலை கட்டுப்படுத்த குடமுழுக்கு மண்டபம் வழியாக யானை பாதையை அடைந்து கோவில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நெரிசலை கட்டுப்படுத்த போதுமான கோவில் பாதுகாவலர்கள், போலீசார் இல்லாததால் பக்தர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.திருச்சி மாவட்ட பக்தர்கள் நட்சத்திர காவடி எடுத்து வந்தனர். திருஆவினன்குடி, அருள்ஜோதி வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

kulandai kannan
ஜன 07, 2025 20:34

மறக்காம தீமுகவுக்கு ஓட்டு போட்டுவிடுங்கள்.


அப்பாவி
ஜன 07, 2025 08:50

இவ்ளோ பேருக்கு கஷ்டமா? முருகா...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை