மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் நடை திறப்பில் மாற்றம்
11-Dec-2024
பழநி : பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உப கோயில்களான திருஆவினன்குடி, குழந்தை வேலாயுதசுவாமி கோயில், பழநி நகரில் பெரியநாயகி அம்மன் கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோயில், பால சமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மார்கழி மாதம் முழுவதும் தனுர்மாத பூஜையை முன்னிட்டு இன்று டிச.16 முதல் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படும். 4:30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி நடக்கிறது. 2025, ஜன.14 அன்று தனுர்மாத பூஜைகள் முடிகின்றன. பழநி பெரியநாயகி அம்மன் கோவிலில் 2025 ஜன.13 அன்று திங்கள்கிழமை அதிகாலை 4:00 மணிக்கு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் அபிஷேகம் நடக்கிறது. பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில்களில் டிச.31 முதல் பகல் பத்து உற்ஸவம் துவங்கும். 2025, ஜன.10 அன்று வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு, அதிகாலை 4:00 மணிக்கு நடக்க உள்ளது.
11-Dec-2024