உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வன விலங்குகளை கட்டுப்படுத்த கோரி தர்ணா

வன விலங்குகளை கட்டுப்படுத்த கோரி தர்ணா

கொடைக்கானல் : கொடைக்கானல் மன்னவனுார் சூழல் சுற்றுலா மைய நுழைவாயிலில் வன விலங்குகளால் விவசாய பயிர்கள் சேதமடைந்து வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம், தர்ணா செய்தனர்.கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் மலைப்பூண்டு, நூல்கோல், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறி பயிர்களை சாகுபடி செய்கின்றனர். சில ஆண்டாக மலைப்பகுதியில் பெருகி உள்ள காட்டுப்பன்றி, காட்டு மாடு, கரடி, மயில், மான் உள்ளிட்ட வனவிலங்குகளால் பயிர்கள் சேதம் அடைந்து விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதித்துள்ளது. இதை கட்டுப்படுத்த வனத்துறையிடம் கோரியும் நடவடிக்கை இல்லை. விவசாய பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்காமல் வனத்துறை மெத்தனத்துடன் நடந்து கொள்கிறது. கொடைக்கானல் டி.எப்.ஓ., வை சந்திக்க விவசாயிகள் சென்றாலும் புறக்கணிக்கும் போக்கை கண்டித்து, விவசாயிகள் நேற்று மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் பின் மதியம் ஒரு மணி வரை சூழல் சுற்றுலா மையம் முன் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தினார். வரும் வாரத்தில் ஆர்.டி.ஓ.. தலைமையில் டி.எப்.ஓ., விவசாயிகள் உள்ளிட்டவர்கள் அடங்கிய அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளிக்க கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை