உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் - திருச்சி ரயிலில் பெட்டிகள் 8 ஆக குறைப்பு நெரிசலில் தவிக்கும் பயணிகள்

திண்டுக்கல் - திருச்சி ரயிலில் பெட்டிகள் 8 ஆக குறைப்பு நெரிசலில் தவிக்கும் பயணிகள்

வடமதுரை:திண்டுக்கல்- திருச்சி இடையே இயக்கப்படும் ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கை 12ல் இருந்து 8 ஆக குறைக்கப்பட்டதால் பயணிகள் நெரிசலில் பயணிக்கும் அவலம் நிலவுகிறது.திண்டுக்கல்லில் இருந்து காலை 6:15 மணிக்கு திருச்சிக்கு இயக்கப்படும் ரயில் கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. பல ஆண்டுகளாக 12 ஐ.சி.எப்., பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்பட்ட இந்த ரயில் சில மாதங்களாக 8 பெட்டிகளுடன் 'டெமு' (டீசல் எலெக்டரிக் மல்டிப்பிள் யூனிட்) ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.இந்த ரயிலில் நவீன வசதிகள் இருப்பதால் பயணிகள் விரும்பும் பெட்டிகளாகவே உள்ளன. ஆனால் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் பயணிகளின் கூட்டத்தால் பயங்கர நெரிசல் நிலவுகிறது. பலரும் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் அவலம் உள்ளது. கட்டட வேலைகளுக்கு செல்வோர் அதிகளவில் இந்த ரயிலை பயன்படுத்துகின்றனர். இவர்கள் தங்களுடன் சட்டி, கடப்பாரை, மண் வெட்டி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்கின்றனர்.நெரிசலால் தினமும் ரயிலில் பயணிகளுக்குள் சண்டை நடக்கிறது. பெட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்த மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி