உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை

ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை

பட்டிவீரன்பட்டி : திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமத்தில், ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவர், வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இங்குள்ள அமைதிப் பூங்காவை சேர்ந்த மொக்கராஜ் மகன் பிரசாந்த் (17); அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தார். நேற்று காலை, தமிழ் தேர்வு நடந்தது. பிரசாந்த் 'காப்பி' அடித்ததை கண்டுபிடித்த ஆசிரியர் பூங்குன்றன், தலைமை ஆசிரியர் சடையாண்டியிடம் அனுப்பி வைத்தார். அவர் கண்டித்து, நன்கு படித்து தேர்வு எழுதுமாறு கூறினார். உணவு இடைவேளையில் வீட்டுக்கு சென்ற மாணவர் திரும்பவில்லை. அவரை அழைத்து வர ஆசிரியர், இரு மாணவர்களை வீட்டுக்கு அனுப்பினார். அங்கு பிரசாந்த் தூக்கில் தொங்கினார். ஆசிரியர், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி, கிராமத்தினர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். ஐந்து மணி நேரம் வத்தலக்குண்டு, தாண்டிக்குடி, திண்டுக்கல் ரோட்டில் போக்குவரத்து பாதித்தது. போலீசார் சமரசத்திற்கு பின் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்