உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி-பொள்ளாச்சி அகலப்பாதை பணி இந்த நிதி ஆண்டில் முடியும்

பழநி-பொள்ளாச்சி அகலப்பாதை பணி இந்த நிதி ஆண்டில் முடியும்

பழநி : ''பழநி- பொள்ளாச்சி அகலப்பாதை பணி, இந்த நிதி ஆண்டுக்குள் முடிக்கப்படும்,'' என, தென்னக ரயில்வே முதன்மை நிர்வாக அலுவலர் விஜயகுமார் தெரிவித்தார். திண்டுக்கல்-பழநி மீட்டர்கேஜ் பாதையை, அகலப்பாதையாக மாற்றும் பணி 2009 ல் துவங்கியது. இப்பணியை, தென்னக ரயில்வே முதன்மை நிர்வாக அலுவலர் (கட்டுமானம்) விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவர் கூறியது: ரூ. 287 கோடி மதிப்பிலான இப்பணியில், இதுவரை 90 சதவீத பணி முடிந்துள்ளது. தற்போது இவ்வழித்தடத்தில் உள்ள ரயில்வே பாலங்கள், கட்டடம், எலெக்ட்ரிகல் தொடர்பான அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 144 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பழநியில் மூன்று பிளாட்பாரங்கள், பயணிகளுக்கு தேவையான நவீன வசதிகளுடன் ரயில்வே ஸ்டேஷன் செயல்பாட்டுக்கு வரும். முழுமையான தரத்துடன் அமைக்க வேண்டியிருப்பதால், குறித்த காலத்திற்குள் முடியவில்லை. வரும் டிசம்பருக்குள் இப்பணி முடிக்கப்பட்டு, ஜனவரியில் இறுதி ஆய்வுக்கு தயாராகி விடும். பழநி- ஈரோடு ரயில் பாதை அமைக்கும் பணி, அடுத்த மார்ச்சில் துவங்கும்.பழநி- பாலக்காடு இடையே 40 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்த நிதி ஆண்டுக்குள் முடியும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை