உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில் கோபுர கலச பிரச்னைக்கு தீர்வு

கோயில் கோபுர கலச பிரச்னைக்கு தீர்வு

பழநி : இடையகோட்டை அருகே அய்யம்பாளையத்தில் ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயில் உள்ளது. இங்கு கோயில் பராமரிப்பு பணியின்போது, கோபுர கலசத்தை மாற்றியமைக்க ஆலோசனை நடந்தது. இதில் இரு தரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து ஒட்டன்சத்திரம் தாசில்தார் தலைமையில், மூன்று முறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.இந்நிலையில் பழநி ஆர்.டி.ஓ., வேலுச்சாமி தலைமையில், நேற்று முன்தினம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், 'கோயிலுக்கு உபயமாக அளிக்கப்பட்ட கலசத்தின்மீது தானம் அளித்தவர் உரிமை கோர முடியாது, எனவே கலசத்தை மாற்றுவது தொடர்பாக, கோயில், கிராம நிர்வாகத்தின் முடிவே இறுதியானது' என தீர்வு காணப்பட்டது. இதற்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி