உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எரிசக்தி ஆற்றலை சேமிக்க வலியுறுத்தி "கிசான்மேளா

எரிசக்தி ஆற்றலை சேமிக்க வலியுறுத்தி "கிசான்மேளா

சின்னாளபட்டி : காந்திகிராம பல்கலை கிராம எரிசக்தி மையம், பெட்ரோலியம் சேமிப்பு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கிராமங்களில், கிசான் மேளா நடந்தது. விவசாயத்தில் பயன்பாட்டை குறைத்து எரிபொருளை சேமிப்பது, இதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து கிராமப்புற மக்கள், விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆத்தூர், அனுமந்தராயன் கோட் டை, சிலுக்குவார்பட்டி, கசவனம்பட்டி, கோட்டைப்பட்டி ஆகிய கிராமங்களில் கிசான் மேளா நடந்தது. இதில், மின் மோட்டார் தேர்வு செய்தல், மோட்டார் மற்றும் பம்புகளை இணைத்தல், பெல்ட் இழுவை திறன் சோதித்தல், சொட்டுநீர் பாசன முறையை பின்பற்றுதல் குறித்து பயிற்சியும், செயல் முறை விளக்கமும் தரப்பட்டது. எரிசக்தி ஆற்றல் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. குறும்படம் திரையிடப்பட்டது. பெட்ரோலியம் சேமிப்பு ஆராய்ச்சி நிறுவன இணை இயக்குனர் ஆல்வின் மனோகர், காந்திகிராம பல்கலை பேராசிரியர்கள் டேவிட்ரவீந்திரன், கிருபாகரன், உதயகுமார், ஆறுமுகம், கள உதவியாளர்கள் காதர் அலி, கோவிந்தராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை