உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஜப்தியில் தப்பிய கலெக்டர் அலுவலகம்

ஜப்தியில் தப்பிய கலெக்டர் அலுவலகம்

திண்டுக்கல்:கோர்ட் உத்தரவின்படி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய முயன்றனர். மாவட்ட நிர்வாகம், ஒரு மாத அவகாசம் கேட்டதால், ஜப்தியில் தப்பியது.கலெக்டர் அலுவலக வளாகம் கட்ட 1984 ல், 215 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு இழப்பீடு தொகையாக, ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இத்தொகை போதது என, நில உரிமையாளர்கள் சப்-கோர்ட்டை நாடினர். ஏக்கருக்கு நான்கு லட்சத்து 40 ஆயிரம் வழங்கவேண்டும் என, கேட்டனர். இதன்படி, ஏக்கருக்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது.இதில், செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த அழகுமலைக்கு, வட்டியுடன் சேர்த்து 22 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய்; மனோன்மணி, காளிமுத்து, பாப்பாத்திக்கு, நான்கு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டது.இத் தொகையை மாவட்ட நிர்வாகம் வழங்காததால், நேற்று காலை, கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட் ஊழியர்கள், வக்கீல்கள் வந்தனர்.கலெக்டர் நாகராஜன், அலுவலக மேலாளர் (குற்றவியல்) சண்முகவேலுவுடன் பேச்சு நடத்தினர். ஒரு மாதத்திற்குள் தொகையை வழங்க உத்தரவாதம் கொடுத்ததால், ஜப்தி செய்ய வந்தவர்கள் திரும்பி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ