உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ‘திண்டுக்கல் வாசிக்கிறது’ விழிப்புணர்வு நிகழ்ச்சி

‘திண்டுக்கல் வாசிக்கிறது’ விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல்: 13வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம், திண்டுக்கல் இலக்கியக் களம் சார்பில் ‘திண்டுக்கல் வாசிக்கிறது’ என்ற மெகா விழிப்புணர்வு புத்தக வாசிப்பு நிகழ்ச்சி பார்வதீஸ் கலை அறிவியல் கல்லுாரி கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் துர்கா துவக்கி வைத்து பேசுகையில், ‘புத்தகத் திருவிழா அக்.,22 முதல் நவ.,1வரை 11 நாட்கள் திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்க உள்ளது. வாசிப்பின் முக்கியத்துவம், 13வது புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மெகா வாசிப்பு நிகழ்ச்சி நடத்தப் படுகிறது. புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்லும் நோக்கத்தில் நடத்தப்படுகிறது. புத்தகத் திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்று புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும்’ என்றார். இலக்கியக் களத்தின் தலைவர் மனோகரன், பார்வதீஸ் கலை அறிவியல் கல்லுாரி இயக்குநர் பிரவீன் சீனிவாசன், இணை இயக்குநர் ஜனனி பிரவீன், முதல்வர் சீனிவாசன், திண்டுக்கல் இலக்கியக் களம் கூடுதல்பொருளாளர் சிவபாலன், துறை சார்ந்த அலுவலர்கள், கல்லுாரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ