முதல்வர் கோப்பை போட்டி : திண்டுக்கல்லுக்கு 5ம் இடம்
திண்டுக்கல்: முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் திண்டுக்கல் மாவட்டம் 32 பதக்கங்களுடன் 5ம் இடம் பிடித்தது. நடப்பாண்டிற்கான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் சில வாரங்களுக்கு முன் நடைபெற்றன. மாவட்ட அளவிலான இந்த போட்டிகளில் 16,899 பேர் பங்கேற்றனர். மாவட்ட அளவில் முதலிடம் பெற்றதன் மூலம் மாநில அளவிலான போட்டிகளில் 677 பேர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 92 பேர் 16 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்களை பெற்று ரூ.62.25 கோடிக்கான பரிசுத் தொகையை பெற்றனர். இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டம் மாநில அளவில் 5ம் இடம் பிடித்தது.