| ADDED : ஜூலை 29, 2011 11:07 PM
சின்னாளபட்டி : சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்து, அனைத்து கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர். கூட்டம் தலைவர் தண்டபாணி (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணை தலைவர் முருகன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.'குறிப்பிட்ட சில வார்டுகளில் தேர்தலுக்கு முன் துவங்கப்பட்ட ரோடு, சாக்கடை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. முடிக்கப்பட்ட பணிகளிலும் தரமில்லை. சில மாதங்களில் சேதமடைந்துள்ளன.
இது குறித்து கடந்த கூட்டங்களில் கேள்வி எழுப்பியும் பதில் இல்லை. பேரூராட்சி பொறியாளர், தொடர்ந்து கூட்டங்களை புறக்கணித்து வருகிறார்,' என, அனைத்து கவுன்சிலர்களும் தெரிவித்தனர். பேரூராட்சியின் மெத்தன போக்கை கண்டித்து, கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கவுன்சிலர்களும் வெளியேறினர்.