| ADDED : செப் 06, 2011 11:00 PM
திண்டுக்கல் : நிலங்களுக்கு, அரசின் வழிகாட்டி மதிப்பீடு, மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.வழிகாட்டி பதிவேட்டில் உள்ள நிலத்தின் மதிப்பு, சந்தை மதிப்பைவிட மிக குறைவாக உள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க, புதிய சந்தை மதிப்பு பதிவேடு தயார் செய்து வெளியிட, அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் நாகராஜன் தலைமையில் நடந்தது. தற்போதைய சந்தை மதிப்பில் குறைந்தது 80 சதவீதம் பிரதிபலிக்கும் வகையில் வழிகாட்டி மதிப்பு தயார் செய்யப் படும். இவை செப்., 15 வரை அந்தந்த பகுதியில் உள்ள சார் பதிவாளர், தாலுகா, நகராட்சி, ஒன்றிய, பேரூராட்சி, வி.ஏ. ஓ., அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க உத்தரவிடப்பட்டது. பொதுமக்கள், பதிவேடுகளை அலுவலக நேரங்களில் பார்வையிட்டு தங்களது கருத்துக்கள் மற்றும் ஆட்சேபத்தை, திண்டுக்கல் மற்றும் பழனி மாவ ட்ட பதிவாளர்களுக்கு செப்., 15 க்குள் எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும்.