உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆவினில் பால் கொள்முதல் அதிகரிக்க நடவடிக்கை

ஆவினில் பால் கொள்முதல் அதிகரிக்க நடவடிக்கை

திண்டுக்கல் : ஆவின் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 50 ஆயிரம் லிட்டர் பால்கொள்முதல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் நடந்தது. துணை பதிவாளர் (பால்வளம்) ராஜாமஸ்தான், ஆவின் பொதுமேலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.மேலாளர்கள் காந்தி, பாலகிருஷ்ணன், கூட்டுறவு சங்க செயலாளர்கள் பங்கேற்றனர். கலெக்டர் நாகராஜன் பேசியதாவது:மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம், ஆவினுக்கு அனுப்ப வேண்டிய பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 42 ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது. கூட்டுறவு சங்க செயலாளர்கள் கூடுதலாக உறுப்பினர்களை சேர்த்து, கொள்முதலை அதிகப்படுத்த வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை