உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நிலம் அபகரித்த வழக்கில் சக்சேனா கூட்டாளி ஆஜர்

நிலம் அபகரித்த வழக்கில் சக்சேனா கூட்டாளி ஆஜர்

திண்டுக்கல் : மில் உரிமையாளரை மிரட்டி 165 ஏக்கர் நிலத்தை அபகரித்த வழக்கில், சென்னையை சேர்ந்த சன் பிக்சர்ஸ் நிர்வாகி சக்சசேனா கூட்டாளி அய்யப்பனை, திண்டுக்கல் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். திருப்பூர் மாவட்டம் உடுமலை காந்திநகரை சேர்ந்த கோகுல்தாஸ் மகன் சீனிவாசன். இவருக்கு சொந்தமாக திண்டுக்கல் மாவட்டம் புதுக்கோட்டை கிராமத்தில் 165 ஏக்கர் நிலம் உள்ளது.இந்த நிலைத்தை சென்னையை சேர்ந்த அய்யப்பன், மிரட்டி கட்டாய பத்திரபதிவு செய்துகொண்டதாக, சீனிவாசன் திண்டுக்கல் நில அபகரிப்பு பிரிவு போலீசில் புகார் செய்திருந்தார். இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராக அய்யப்பனை, சென்னையில் இருந்து திண்டுக்கல்லுக்கு போலீசார் அழைத்து வந்தனர். ஜே.எம்., 2 கோர்ட் மாஜிஸ்திரேட் லதா முன் ஆஜர்படுத்தியதில் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி