உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோஷ்டி தகராறில் 26 பேர் மீது வழக்கு

கோஷ்டி தகராறில் 26 பேர் மீது வழக்கு

நிலக்கோட்டை : நிலக்கோட்டை அருகே நடந்த கோஷ்டி தகராறில் ஊராட்சி தலைவர் உட்பட 26 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிவஞானபுரம், போடியகவுண்டன்பட்டியை சேர்ந்த மாணவர்கள் அவ்வழியாக நிலக்கோட்டைக்கு செல்லும் அரசு பஸ்சில் பள்ளிக்கு சென்றனர். பஸ்சில் வந்த மாணவிகளை சிவஞானபுரத்தை சேர்ந்த மாணவர்கள் கேலி செய்தனர். இதனை போடியகவுண்டன்பட்டி மாணவர்கள் தட்டிக் கேட்டனர். வாய் தகராறு ஏற்பட்டதால், பஸ்சிலிருந்து மாணவர்கள் இறக்கிவிடப்பட்டனர். தகவலறிந்த இரு கிராம பெரியவர்கள் சமாதான பேச்சில் ஈடுபட்டபோது மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கியதில் இரு தரப்பிலும் ஏழு பேர் காயமடைந்தனர். கூடுதல் எஸ்.பி.,ராமமூர்த்தி, நிலக்கோட்டை டி.எஸ்.பி., அன்னம் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். சமரசம் ஆகாததால் சிவஞானபுரம் ஊராட்சி தலைவர் பாண்டியராஜன் மற்றும் 11 பேர், போடியகவுண்டன்பட்டியை சேர்ந்த 15 பேர் மீது நிலக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை