உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விடுதி பார்க்கிங்கால் இடையூறு

விடுதி பார்க்கிங்கால் இடையூறு

கொடைக்கானல்: கொடைக்கானலில் தனியார் விடுதி பார்க்கிங்கால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது தொடர்கிறது. கொடைக்கானல் அண்ணா சாலையில் உள்ள தனியார் விடுதி அருகே பஸ் ஸ்டாண்ட், வணிக வளாகம் உள்ளது. குறுகலான வளைவில் இவ்விடுதி நுழைவாயில் முன் ரோட்டில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் வாகனங்கள் நெரிசலில் தவிக்கின்றன. இவ்விடுதிக்கு முறையான பார்க்கிங் வசதி செய்யப்படாத நிலையில் அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. போக்குவரத்தை சீர் செய்வதற்கு மையம் அமைத்தபோதும், ஒரு வழிப்போக்குவரத்தில் வாகன ஓட்டிகளிடம் மட்டுமே கடுமை காட்டுகின்றனர். இனியாவது போக்குவரத்து நெரிசலுக்கு வித்திடும் இப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை