உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தி.மு.க., கலரில் கம்யூ., சின்னம் குழம்பும் வாக்காளர்கள்

தி.மு.க., கலரில் கம்யூ., சின்னம் குழம்பும் வாக்காளர்கள்

சாணார்பட்டி: லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது. இதைதொடர்ந்து சாணார்பட்டி பகுதி சாலை யோர சுவரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமான அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தை வரைவதில் கூட்டணி கட்சியான தி.மு.க., வினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை என காட்டும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சின்னத்தை தி.மு.க.,வின் கருப்பு, சிவப்பு நிறத்திலே வரைகின்றனர். இதை பார்க்கும் மக்கள் ஓட்டுப்பதிவு போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சின்னம் தி.மு.க., கலரில் இல்லையே என குழப்பமடையும் நிலை ஏற்படும் என்பதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்ன செய்வது என தெரியாமல் முழிக்கின்றனர். இதோடு தி.மு.க., முக்கிய நிர்வாகிகளை சந்தித்தும் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ