மேலும் செய்திகள்
அமித்ஷாவுக்கு எதிராக தி.மு.க., ஆர்ப்பாட்டம்
20-Dec-2024
வேடசந்துார் : அமைச்சர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க., தெற்கு ஒன்றியம், பேரூர் ,மாவட்ட இளைஞர் அணி சார்பில் வேடசந்துார் பி.வி.எம்., மெட்ரிக் பள்ளியில் நடந்த கபடி போட்டியை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., காந்திராஜன் முன்னிலை வகித்தார்.வேடசந்துார் தொகுதி அளவில் 37 அணிகள் பங்கேற்றன. தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் வீரமணி, ஒன்றிய செயலாளர்கள் கவிதா, ஆலம்பாடி சீனிவாசன், ராஜலிங்கம், சுப்பையன், பாண்டி, ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி, பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி, இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், பேரூர் செயலாளர்கள் கார்த்திகேயன்,கதிரவன், கருப்பன், கணேசன், செந்தில்குமார், தி.மு.க., நிர்வாகிகள்கவிதாமுருகன், மருதபிள்ளை, சவுந்தர், சுப்பிரமணி, மணிமாறன், சரவணன் பங்கேற்றனர்.
20-Dec-2024