உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தி.மு.க., தலைவரை எதிர்த்து தி.மு.க.,வினர் போராட்டம்

தி.மு.க., தலைவரை எதிர்த்து தி.மு.க.,வினர் போராட்டம்

நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் தி.மு.க., தலைவரை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.பழநி நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு தி.மு.க.,வைச் சேர்ந்த கருப்பாத்தாள் தலைவராக உள்ளார். நேற்று தி.மு.க.,வினர் ,் தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சாக்கடை, குடிநீர், சாலை வசதிகள் குறித்து தலைவரிடம் முறையிடும்போது அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக கூறி கண்டனம் தெரிவித்தனர். காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை தர்ணாவில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை