உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம்

தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டிக்கு தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., வில் ஒட்டன்சத்திரம் வடக்கு, தெற்கு, தொப்பம்பட்டி கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு ஒன்றியங்கள் இருந்தன. தற்போது கட்சியின் நிர்வாக வசதிக்காக ஒட்டன்சத்திரம் வடக்கு, மேற்கு, மத்திய ,தொப்பம்பட்டி வடக்கு, மேற்கு, மத்திய ஒன்றியங்கள் என ஆறாக பிரிக்கப்பட்டு ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றியத்துக்கு இரா. ஜோதீஸ்வரன், மேற்கு ஒன்றியத்துக்கு தி.தர்மராஜன், மத்திய ஒன்றியத்துக்கு எஸ்.ஆர்.கே.பாலு, தொப்பம்பட்டி வடக்கு ஒன்றியத்துக்கு கா.தங்கராஜ், மேற்கு ஒன்றியத்துக்கு நா.சுப்பிரமணியன், மத்திய ஒன்றியத்துக்கு கா. பொன்ராஜ் ஆகியோர்களை நியமனம் செய்து கட்சி பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை