உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெண் குழந்தை இறப்பில் சந்தேகம்: டாக்டர் புகார்

பெண் குழந்தை இறப்பில் சந்தேகம்: டாக்டர் புகார்

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே பெண் குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில் டாக்டர் புகாரளித்துள்ளார். சீரகம்பட்டியை சேர்ந்தவர் சிவராம் மனைவி கஸ்துாரி 20. இவருக்கு ஜூலை 3ல் எஸ். தும்மலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 வது பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து மூன்று தினங்களுக்கு பின்பு நலமுடன் வீடு திரும்பினார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றபோது ஜூலை 15ல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்து விட்டதாகவும், வீட்டின் அருகே புதைத்து விட்டதாகவும் கூறினர். இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் முகமது முஸ்தபா நிலக்கோட்டை போலீசில் புகார் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ