உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆவண எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம்

ஆவண எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம்

வடமதுரை: பத்திரப்பதிவுத் துறையில் தமிழக அரசின் ஸ்டார் 3.0 இ-டெண்டர் முறை, தனியார் மயமாக்கல் நடவடிக்கைகளை கண்டித்து வடமதுரை சார்பதிவாளர் அலுவலகம் முன் ஆவண எழுத்தர்கள் நலச்சங்கம் சார்பில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத் தலைவர் சிவகுரு தலைமை வகித்தார். செயலாளர் கோதண்டபாணி முன்னிலை வகித்தார். துணைச்செயலாளர் ஆதிநாராயணன் பேசுகையில், 'காகிதம் இல்லாமலும், நேரில் வர தேவையற்ற பதிவு நடைமுறை பயன்பாட்டிற்கு வந்தால் பல்வேறு முறைகேடுகள் நடக்கும். தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு பணியில் இருக்கும் 50 ஆயிரம் பேர், அவர்களது குடும்பத்தினர் 2 லட்சம் பேர் பாதிக்கப்படுவர். வடமதுரை அலுவலகத்திற்கு நிரந்தர சார்பதிவாளர் நியமிக்க வேண்டும்' என்றார். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை