உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குரங்குகள் சேட்டையால் நாய்கள் இறப்பு

குரங்குகள் சேட்டையால் நாய்கள் இறப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வீடுகளுக்குள் புகுந்து கர்ப்பிணி, பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகள் சேட்டையால் இரு நாய்கள் இறந்தன. இதன் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 12-வது குறுக்குத்தெருவில் பேயாண்டி கோயில் அருகே அதிகளவில் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு 3 குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து பாத்திரங்களை எடுத்துச்செல்வது, வீட்டின் மாடியில் கொடிகளில் தொங்க விடப்படும் ஆடைகளை கிழித்து சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தன. பொதுமக்கள் விரட்ட முயன்ற போது அவர்களை அச்சுறுத்திவிட்டு தப்புகின்றன. குரங்குகளின் அட்டகாசத்தால் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட 2 நாய்கள் இறந்தன.அப்பகுதியினர் கூறியதாவது : 15 நாட்களுக்கு முன்பு இப்பகுதிக்கு 3 குரங்குகள் வந்தன. அவை வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திவிட்டு வீட்டில் இருக்கும் வாகன சாவிகள், பழங்கள், உணவு பொருட்களை தூக்கி சென்றுவிடுகின்றன. இவற்றால் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தோம். வனத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனிடையே 3 நாட்களுக்கு முன்பு நடந்த கோயில் விழாவின் போது வெடிகள் சத்தம் கேட்டு பயந்துபோன 2 குரங்குகள் ஓடிவிட்டன. ஆனால் ஒரு குரங்கு மட்டும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. நேற்று கூட கர்ப்பிணியை அச்சுறுத்திய குரங்கு அந்த பெண்ணின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை மாடிப்படியில் இருந்து தள்ளிவிட்டது. நாய் இறந்து போனது. இதில் பயந்துபோன அந்த கர்ப்பிணி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். தொல்லை கொடுக்கும் குரங்கை உடனே பிடித்து அகற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை