தொற்றுடன் நாய்கள்; சாலையோரம் இல்லை தடுப்பு பரிதவிப்பில் பழநி நகராட்சி 6 வது வார்டு மக்கள்
பழநி: தொற்றுடன் வலம் வரும் நாய்கள், சாலையோரம் இல்லை தடுப்பு என பழநி நகராட்சி 6வது வார்டு மக்கள் பாதிக்கின்றனர்.இந்திராநகர்,புது தாராபுரம் ரோடு, இட்டேரி ரோடு பகுதிகளை கொண்ட இந்த வார்டு நகரின் முக்கிய பகுதியாக இருப்பதால் குடிநீர், குப்பை அகற்றுதல் நடைபெற்று வருகிறது. 6வது வார்டை இணைக்கும் இட்டேரிரோடு, புதுதாராபுரம் ரோடு பகுதிகளில் அடிக்கடி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சிரமப்பட வேண்டியுள்ளது. வடிகால் இன்றி மழை காலங்களில் சாலைகளில் மழைநீர் ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டுனர்கள் சிரமம் அடைகின்றனர். இந்திரா நகர் பகுதியில் இருந்து புதுதாராபுரம் ரோடு, சுப்பிரமணியபுரம் ரோடு பகுதிகளை அடையும் போது நெரிசலால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. நோய் தொற்றுடன் நாய்கள்
சிவலிங்கம்,ஒப்பந்ததாரர்: இந்திராநகர் வீதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் உள்ளதால் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் நடமாடிய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள், முதியவர்கள் ,வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். நோய் தொற்று உடன் நாய்கள் சுற்றித் திரிவதாலும் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. கொசு மருந்து அடியுங்க
மணிகண்டன், ஆட்டோ ஓட்டுனர் : வார்டில் கழிவு நீர் தேக்கத்துக்கு தீர்வாக சாக்கடைகளை கட்ட வேண்டும் இல்லையேல் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டும். இந்திரா நகர் சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இங்கு கொசு தொல்லையும் அதிகமாக உள்ளதால் கொசு மருந்து அடிக்க வேண்டும். முறைப்படுத்துங்க
ரவீந்திரன், தனியார் நிறுவன ஊழியர் : கவுண்டர் இட்டேரி ரோடு பகுதி தற்போது அதிக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது. சாலை ஓரங்களில் உள்ள சாக்கடைகளில் தடுப்பு சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படும்
வீரமணி, கவுன்சிலர் (தி.மு.க.,): வார்டில் அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகள் சரி செய்யப்படுகிறது. சாக்கடை கட்டுமான பணிகள் இட்டேரி ரோடு அருகே நடைபெற்று வருகிறது. வார்டு பகுதிக்குள் அனைத்து இடங்களிலும் சரி செய்யப் படும். தெரு நாய்கள் தொல்லை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கண்காணிப்பு கேமராக்களை வார்டு பகுதியில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.