உலக நன்மை வேண்டி அன்னதானம்
கோபால்பட்டி : கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டியில் முனியப்பன் சுவாமி கோயிலில் உலக நன்மை வேண்டி ஆடி படையல் திருவிழா நடந்தது. இதையொட்டி நள்ளிரவு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம்,தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து கோயில் முன்பாக 20 ஆடுகள் வெட்டப்பட்டு கறி விருந்து, சாதம் தயார் செய்யப்பட்டது. நேற்று காலையில் சுவாமிக்கு படையலிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. செடிபட்டி, அய்யாபட்டி, வேம்பார்பட்டி, கோபால்பட்டி சுற்று கிராம பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.