உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இரட்டிப்பான வெண்டை விலை

இரட்டிப்பான வெண்டை விலை

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கிலோ ரூ.20 க்கு விற்ற வெண்டைக்காய் இரு நாட்களில் இரட்டிப்பாகி ரூ. 40க்கு விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டன்சத்திரம் சுற்று பகுதிகளில் வெண்டைக்காய் விளைவிக்கப்படுகிறது. மழை காரணமாக இதன் விளைச்சல் பாதிக்க மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்து வருகிறது. சுப முகூர்த்தங்கள் அதிகமாக நடக்கும் என்பதால் வெண்டை தேவை அதிகரித்துள்ளது. கிலோ ரூ.20 க்கு விற்ற வெண்டைக்காய் நேற்று ரூ.40க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ