உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வத்தலக்குண்டில் இரட்டை கொலை

வத்தலக்குண்டில் இரட்டை கொலை

வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு அருகே முன் விரோதத்தில் இரண்டு தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டனர்.திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே கொன்னம்பட்டியைச் சேர்ந்தவர் அழகுமலை, 55, மனோகரன், 50. இருவருக்கும் திருமணமாகவில்லை. கட்டட தொழிலாளிகள். ஆறு மாதங்களுக்கு முன் இருவரையும், அதே ஊரை சேர்ந்த குபேந்திரன் மகன் நவீன், 22, தாக்கியதில் காயமடைந்து பட்டிவீரன்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர். அங்கு சமரசம் செய்து வைக்கப்பட்டது.நேற்று மதியம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு, 8:30 மணிக்கு ஏற்பட்ட தகராறில் அழகுமலை, மனோகரனை, நவீன் கட்டையால் தாக்கி தப்பினார். தலையில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இது தெரியாத நவீன், லேசாக தாக்கியதாக நினைத்து வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவரை வத்தலக்குண்டு போலீசார் கைது செய்தனர். கிராமத்தினர் கூறுகையில், 'ஆறு மாதங்களுக்கு முன் நடந்த தகராறுக்காக பட்டிவீரன்பட்டி போலீசார் நவீனை கைது செய்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி