உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அரசு பஸ் மரத்தில் மோதி டிரைவர் பலி

அரசு பஸ் மரத்தில் மோதி டிரைவர் பலி

நத்தம் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அரசு பஸ் மரத்தில் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.-நத்தம் அருகே புதுப்பட்டி பகுதியில் வந்த அரசு பஸ் அக் . 25-ல் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பஸ்சில் சிக்கிக்கொண்ட, கோபால்பட்டியை சேர்ந்த டிரைவர் மோகன் 55, நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டார். பலத்த காயத்துடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மோகன் நேற்று இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி