விபத்தில் ஓட்டுனர் பலி
குஜிலியம்பாறை: ஆலம்பாடி ஊராட்சி காடமநாயக்கனூரை சேர்ந்தவர் முனியாண்டி மகன் வினோத் 23. அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடன், ஆர்.வெள்ளோடு - பிச்சனாம்பட்டி ரோட்டில், காரை ஓட்டிச் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து காடமநாயக்கனூர் முத்துச்சாமி காடு அருகே கார் கவிழ்ந்தது. இதில் வினோத் சம்பவ இடத்திலேயே இறந்தார். குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.