உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தரைப்பாலத்தில் உருவான பள்ளத்தால் தடுமாறும் ஓட்டிகள்

தரைப்பாலத்தில் உருவான பள்ளத்தால் தடுமாறும் ஓட்டிகள்

சேதமான பயணியர் நிழற்குடைஎரியோடு நல்லமநாயக்கன்பட்டி ரோடு பிரிவில் உள்ள பயணியர் நிழற்குடை சேதமடைந்துள்ளது. பயணிகள் பயன்படுத்த முடியாது வெயில் ,மழையில் நின்று பஸ் ஏறுகின்றனர். சீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -- ஆறுமுகம், எரியோடு...............விபத்துக்கு வாய்ப்புநத்தம் செந்துறை ரோட்டில் இரவு நேரங்களில் சுற்றி திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது . விபத்தும் ஏற்படுகிறது . இதனை கட்டுப்படுத்த உள்ளாட்சி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரபு, நத்தம்.............--------சாய்ந்த பெயர் பலகைதிண்டுக்கல் நாகல்நகரிலிருந்து மதுரை செல்லும் ரோட்டில் உள்ள பெயர் பலகை சாய்ந்த நிலையில் உள்ளது . இதை சரி செய்ய நெடுஞ்சாலை துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மகேந்திரன், நாகல் நகர்............----------தரைபாலம் சேதம்திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் மேற்கு பகுதி ரோட்டில் தரைபாலம் சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது .பள்ளத்தில் வேறு குச்சியை நட்டு வைத்துள்ளனர் .இரவு நேரங்களில் பள்ளம் தெரியாது விழுகின்றனர் .செல்வம், திண்டுக்கல்...................----------விழும் நிலையில் மின் கம்பம்திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு கொடுக்கும் பகுதியில் மின்கம்பத்தின் அடிப்பகுதி சிமென்ட் பூச்சு சேதமடைந்துள்ளது .இதனால் மின் கம்பம் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைசரி செய்ய வேண்டும். ராமு, திண்டுக்கல்................---------குப்பையால் சுகாதாரக்கேடுலெக்கையங்கோட்டை பைபாஸ் ரோடு கொல்லப்பட்டி குளம் அருகே சாக்கு மூடைகளில் கொண்டு வந்து குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது .இதன் மூலம் நிலத்தடி நீரிலும் பாதிப்பு எற்படும் நிலை உள்ளது. -வீரப்பன் ஒட்டன்சத்திரம்.........----------தெருவில் ஓடும் கழிவு நீர்முள்ளிப்பாடி ஊராட்சி செட்டியபட்டி வடக்கு தெருவில் சாக்கடை இல்லாததால் கழிவு நீர் பாதையில் தேங்கி நிற்கிறது ,கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும். லதா, செட்டியபட்டி...............


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி