உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முருங்கை கிலோ ரூ.67க்கு விற்பனை

முருங்கை கிலோ ரூ.67க்கு விற்பனை

ஒட்டன்சத்திரம்:வரத்து குறைவால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை இரண்டே நாட்களில் கிலோவிற்கு ரூ.20 அதிகரித்து ரூ.67 க்கு விற்பனையானது. ஒட்டன்சத்திரம், காவேரியம்மாபட்டி, அம்பிளிக்கை, கப்பலப்பட்டி, இடையகோட்டை, மார்க்கம்பட்டி கள்ளிமந்தையம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், மூலனுார் பகுதிகளில் விளைவிக்கப்படும் முருங்கைக்காய் இந்த மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. முருங்கைக்காய் சீசன் முடிவடையும் நிலையில் உள்ளதாலும் தற்போது பெய்த மழை காரணமாகவும் விளைச்சல் குறைந்து மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்து விட்டது. இதன் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன் கிலோ ரூ. 47க்கு விற்ற முருங்கைக்காய் ரூ. 20 அதிகரித்து ரூ.67க்கு விற்பனையானது. கமிஷன் கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில் ' இனி வரும் நாட்களில் வரத்து இன்னும் குறையும் என்பதால் முருங்கை விலை தொடர்ந்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை