உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / லெக்கையன்கோட்டை ரோட்டில் புழுதி புயல்

லெக்கையன்கோட்டை ரோட்டில் புழுதி புயல்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் ரோட்டில் லெக்கையன்கோட்டை - செம்மடைப்பட்டி இடையே நடைபெற்று வரும் பாலம் பணியால் புழுதி புயல் கிளம்புவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் ரோட்டில் லெக்கையன்கோட்டையில் இருந்து செம்மடைப்பட்டி வரை பாலம் அமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. லெக்கையன்கோட்டையில் புதிய பைபாஸ் ரோடு தொடங்கும் இடத்தில் இருந்த பள்ளங்களில் மணலை குவிலாக கொட்டி வைத்திருப்பதால் கனரக வாகனங்கள் செல்லும்போது துாசி கிளம்பி ரோட்டை முழுவதும் மறைக்கிறது. புகை மண்டலமாக காட்சியளிப்பதால் டூவீலர் ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாத அளவிற்கு சிரமம் ஏற்படுகிறது. வாகன ஓட்டுகளின் கண்களில் மணல் விழுந்து விபத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. தற்காலிகமாக தண்ணீர் ஊற்றினால் ஓரளவு சமாளிக்க முடியும். ரோட்டுப் பணிகள் முடியும் வரை தற்காலிகமாக தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை