உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நிழற்கூடம் கட்ட பூமி பூஜை

நிழற்கூடம் கட்ட பூமி பூஜை

எரியோடு: எரியோடு அய்யலுார் ரோட்டில் உருதமாலையம்மன் கோயில் பகுதியில் வேடசந்தூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.7.50 லட்சத்தில் பயணியர் நிழற்கூடம் அமைக்க பூமி பூஜை நடந்தது. காந்திராஜன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி, செயல் அலுவலர் சையது அபுதாகிர், தி.மு.க., நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ