உள்ளூர் செய்திகள்

இ.கம்யூ., போராட்டம்

வேடசந்துார்: குட்டம் ஊராட்சி தேவிநாயக்கன் பட்டியை சேர்ந்த பட்டியலின மக்களுக்கு மூன்று ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா வழங்காத வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து இ.கம்யூ., சார்பில், வேடசந்துார் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கனிவேல், ஒன்றிய துணை ச்செயலாளர் சுப்பிரமணி, ஒன்றிய குழு உறுப்பினர் முத்துச்சாமி முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள், பொன்னுச்சாமி ஆறுமுகம், பழனிச்சாமி, பாலதண்டாயுதம், மோட்சராணி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை