ரயில் மோதி முதியவர் பலி
திண்டுக்கல் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் முதலாவது நடைமேடை முடிவில் ரயில் மோதியதில் 55 வயது ஆண் இறந்து கிடந்தார். திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரித்ததில், திண்டுக்கல், திருச்சி, பழநி உள்ளிட்ட இடங்களில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்திவந்தவர் என தெரிந்தது. அவர் குறித்த வேறு விவரங்கள் இல்லை.