உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காட்டுமாடு தாக்கி மூதாட்டி பலி

காட்டுமாடு தாக்கி மூதாட்டி பலி

கொடைக்கானல்: -கொடைக்கானல் குறிஞ்சிநகரை சேர்ந்தவர் ரங்கசாமி என்பவரது மனைவி நல்லாயி 80. நேற்று இவர் வசிக்கும் வீடு அருகே சென்ற போது புதருக்குள் மறைந்திருந்த காட்டுமாடு தாக்கியதில் காயமடைந்தார். கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் பலியானார். வனத்துறையினர் பார்வையிட்டு முதற்கட்டமாக இறந்த நல்லாயி குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்கினர். தொடர்ந்து காட்டு மாடு, வனவிலங்கு தாக்குதலால் படுகாயம் அடைவதும், பலியாவதும் தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !