மேலும் செய்திகள்
வத்தலக்குண்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
10-Jun-2025
வத்தலக்குண்டு:திண்டுக்கல்மாவட்டம் வத்தலக்குண்டு மின் செயற் பொறியாளர் அலுவலக கம்ப்யூட்டரில் இருந்து மே 14 ல் சில பெண் பணியாளர்கள் குறித்து ஆபாச இமெயில்கள் துணை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மின்வாரிய அதிகாரிகள், வத்தலக்குண்டு போலீஸ் ஸ்டேஷன், எஸ்.பி., சைபர் கிரைமில் புகார் செய்தனர்.செயற்பொறியாளர் அலுவலக கம்ப்யூட்டரை போலீசார் ஆய்வு செய்ததில் இருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களில் ஒருவர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்ததால் முதற்கட்டமாக அய்யம்பாளையம் துணை மின்நிலைய இளநிலை பொறியாளர் பாஸ்கரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து மேற்பார்வை பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.
10-Jun-2025