உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பகலில் எரியும் மின்விளக்குகளால் வீணாகும் மின்சாரம்...

பகலில் எரியும் மின்விளக்குகளால் வீணாகும் மின்சாரம்...

பகலில் எரியும் மின்விளக்குகள் : திண்டுக்கல் வத்தலக்குண்டு பைபாஸ் ரோட்டில் உயர் மின்கோபுர மின்விளக்கு பகலில் எரிந்து கொண்டே உள்ளது. இதனால் மின்சாரம் வீணாகிறது. சில நேரங்களில் இரவு நேரங்களில் எரியாமல் இருட்டில் மூழ்கியுள்ளது. பகல் நேரங்களில் எரியாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.---செல்வகுமார்,திண்டுக்கல்.--------........குப்பையால் உருவாகும் பாதிப்பு : திண்டுக்கல் அருகே மாலப்பட்டி ரோட்டில் குப்பையை கொட்டி அகற்றாமல் விடப்பட்டுள்ளது. இதனால் குப்பைகள் ரோட்டோரங்களில் சிதறி கிடக்கிறது. பல நாட்களாக அள்ளாமல் குவிந்துள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பையை தினமும் அகற்ற வேண்டும்.-வீரக்குமார்,திண்டுக்கல்.----------........ரோட்டில் ஓடும் கழிவுநீர் : திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கழிப்பிடத்திலிருந்து செப்டிக் டேங்க் கழிவு ரோட்டில் வருவதால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் பயணிகள் மூக்கை பிடித்து செல்கின்றனர். சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அய்யனார், திண்டுக்கல்.-----------......கழிவு மணலால் அவதி : திண்டுக்கல் ஓய்.எம்.ஆர். பட்டி ரோட்டில் சாக்கடை கால்வாய் துார்வாரி மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அகற்றாததால் அப்பகுதி முழுவதும் சிதறி மீண்டும் சாக்கடையில் மண் மூடுகிறது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-குரு, திண்டுக்கல்.----------........சேதமான குடிநீர் தொட்டி : சாணார்பட்டி வீரசின்னம்பட்டி ஊராட்சியில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி பயன்பாடு இல்லாமல் சேதமாகிறது. இதனால் அரசு பணம் வீணாவதுடன் அப்பகுதி மக்கள் குடிநீர் பிரச்சினையை சந்திக்கின்றனர். சேதமாகும் குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பிரபாகர் தனபாலன், வீர சின்னம்பட்டி.-----------.......ரோடுகளால் சிரமப்படும் மக்கள் : குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி செங்குளத்துப்பட்டியிலிருந்து கருங்குளம் செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தினமும் சிரமப்படுகின்றனர். ரோடை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முருகன், குஜிலியம்பாறை.-----------.......கால்நடைகளால் ஏற்படும் விபத்துக்கள் : திண்டுக்கல் நத்தம் ரோட்டில் கால்நடைகள் படுத்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கால்நடைகள் ஆங்காங்கே திரிவதால் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். கால்நடை திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-விஜய், திண்டுக்கல்.----------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை