மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
குஜிலியம்பாறை: --: தமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள மின் கணக்கீட்டாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜிலியம்பாறை மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. டி.என்.இ.பி., எம்ப்ளாயிஸ் பெடரேஷன் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இணைச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். காலிப் பணியிடங்களுக்கு முறைப்படி ஊழியர்களை நியமனம் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.