கொடையில் ஆக்கிரமிப்பு வன நிலம் மீட்பு
வேலி அமைத்து அதிரடி காட்டிய வனத்துறைதாண்டிக்குடி: கொடைக்கானல் வனப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை வனத்துறை மீட்டு வேலி அமைத்தது. பெரும்பள்ளம் வனப்பகுதிக்குட்பட்ட கும்பறையூரில் வனத்துறை இடத்தை ஆக்கிரமித்து தனியார் பாதை அமைத்தது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. வனச்சரணாலயத்திற்கு அருகில் வனத்துறை அனுமதியின்றி தனியார் விற்பனை நோக்கத்திற்கு பிளாட் அமைத்தனர். இதற்கான நுழைவுவாயில் நிலம் வனப்பகுதியில் இருக்கவே வனத்துறை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை உறுதி செய்தது. இதையடுத்து சில தினங்களுக்கு முன் வனத்துறை எல்லை கற்கள் நிறுவி வேலி அமைத்தது. வனத்திற்கு அருகில் உள்ள பண்ணை நிலம் குறித்தும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஞ்சர் குமார் கூறுகையில்,'' கும்பறையூரில் வனத்துறை இடத்தை 10 மீட்டர் ஆக்கிரமித்து நுழைவுவாயில் பாதை அமைக்கப்பட்டிருந்தது. நிலம் அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இடத்தில் வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு மீட்பு பகுதியில் எவ்வித நட வடிக்கையும் மேற்கொள்ள கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.