உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பாதயாத்திரை பாதையில் முளைக்கும் ஆக்கிரமிப்பு கடைகள்

 பாதயாத்திரை பாதையில் முளைக்கும் ஆக்கிரமிப்பு கடைகள்

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்களின் பாதை ஆக்கிரமிப்பால் பக்தர்கள் ரோட்டில் நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது பழநி முருகன் கோயிலுக்கு வரும் தைப்பூச பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால், எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புது, பழைய தாராபுரம் ரோடுகள், திண்டுக்கல் ரோடு, உடுமலை, மடத்துக்குளம் ரோடு பகுதிகளில் தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. பாதயாத்திரை பக்தர்களுக்கான தனிப்பாதையில் தற்காலிக கடைகள், கணக்கன்பட்டி, திருநகர், ஆயக்குடி பகுதிகளில் முளைத்துள்ளன. மேலும் சில இடங்களில் பாதயாத்திரை பாதைகளில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் பக்தர்கள் ரோட்டில் இறங்கி நடக்கும் நிலை ஏற்படுகிறது. இச்சூழல் காரணமாக வேகமாக வரும் வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே உள்ளாட்சி அமைப்புகள் இப்பாதையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை