வாசகர்கள் கருத்துகள் ( 1 )
காடுகளில் கொண்டு போய் விடலாம் நம்ம லுங்கிக்கு நாய் என்றால் ஆகாது அப்புடி ஒரு tool kit இருக்குமோ
திண்டுக்கல் மாவட்டத்தின் மக்கள் அடர்த்திக்கு இணையாக, தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நகர், ஊரகம், கிராமப்புறங்களில் தெருநாய் தொல்லையால் தினசரியும் நுாற்றுக்கணக்கானோர் நாய்க்கடிக்கு ஆளாகி தடுப்பூசி போடுவதற்காக மருத்துவமனைக்கு வருகின்றனர். திண்டுக்கல் டவுன் பகுதியில் ரவுண்ட் ரோடு, நாகல்நகர், காந்தி மார்கெட் பகுதிகளிலும், பாலகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து இடங்களிலும் கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் உலா வருகின்றன. இவை, இரவு நேரங்களில் ரோடுகளில் செல்வோரை விரட்டுவதுடன் கடிக்க பாய்கிறது. டூவீலரில் செல்வோரையும் துரத்துவதால் விபத்து நிகழ்கிறது. ஒருநாளைக்கு சராசரியாக 50 பேர் மாவட்டத்தில் நாய்க்கடிக்கு சிகிச்சை எடுக்கிறார்கள். அதன்படி, திண்டுக்கல்லில் ஜூன் மாதம் 423 பேர், ஜூலையில் 520 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜன., முதல் ஜூலை வரை 3 ஆயிரத்து 66 பேருக்கு நாய்க்கடி ஊசி செலுத்தப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் மட்டும், ஒட்டுமொத்தமாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை ஆண்டாண்டுக்கு உயர்ந்துகொண்டே செல்கிறது. எனவே, அதிகரித்துள்ள தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேசமயம் மருத்துவமனைகளில் நாய்க்கடிக்கு செலுத்தப்படும் 'ஆன்டி ரேபிஸ் வேக்சின் (ஏ.ஆர்.வி.,)' தடுப்பூசிகள் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்யவேண்டும்.
காடுகளில் கொண்டு போய் விடலாம் நம்ம லுங்கிக்கு நாய் என்றால் ஆகாது அப்புடி ஒரு tool kit இருக்குமோ