சுற்றுச்சூழல் கருத்தரங்கம்
நிலக்கோட்டை : அரசு பெண்கள் கல்லுாரியில் தொழில் நிர்வாகவியல் துறை ,தமிழ்நாடு அரசு சுற்றுசூழல் பருவநிலை மாற்றம் துறை சார்பில் இந்தியாவில் பசுமை வளர்ச்சிக்கான இயக்கிகள், தடைகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. தொழில் நிர்வாகவியல் துறை பேராசிரியர் திலீபன் தலைமை வகித்தார். வணிகவியல் பேராசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கீதா, பேராசிரியர்கள் சீனிவாசகன், லதா, சின்னசாமி, மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி இணை பேராசிரியர் ஜெயக்கொடி பேசினர். பேராசிரியர் சுபஸ்ரீ நன்றி கூறினார்.