உள்ளூர் செய்திகள்

செயற்குழு கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்டத் தலைவர் அபுதாகிர் தலைமை வகித்தார். பகுதிச் செயலாளர் சர்தார் சேட் வரவேற்றார். கூட்டத்தில் திண்டுக்கல்லில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதை கண்டித்தும், தடை இல்லா மின்சாரம் வழங்க வலியுறுத்தியும், குண்டும், குழியுமான போக்குவரத்திற்கு இடையூறான ரோடுகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் முகமது அலி, நாகராஜ், யூனுஸ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி