கல்லுாரியில் கண்காட்சி
திண்டுக்கல்; திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். பொறியியல்,தொழில்நுட்ப கல்லுாரி,எஸ்.எஸ்.எம். கலை,அறிவயில் கல்லுாரி சார்பில் டெக்னோ பெஸ்ட் 2024 பள்ளி மாணவியற்கான திறன் கண்டறிதல் போட்டி கண்காட்சி நடந்தது. 1200க்கு மேலான மாணவர்கள் பங்கேற்றனர். ஜோசப் டோமினிக் வரவேற்றார். கலை அறிவியில் கல்லுாரி முதல்வர் சம்பத்குமார் பேசினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள்,கேடயங்களை எஸ்.எஸ்.எம்.பொறியியல்,தொழில் நுட்ப கல்லுாரி முதல்வர் செந்தில்குமரன் வழங்கினார். ஏற்பாடுகளை கல்லுாரி பேராசிரியர்கள் சரவணன்,ஜனனி செய்தனர்.